ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணை?
26 Jul,2018
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு எதிரான மற்றுமொரு பிரேரணை சமர்ப்பிக்கப்படக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரதீபா மஹனாமஹேவா இதனை தெரிவித்துள்ளார்.
மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கொழும்பில் நடைபெற்ற மாநாடொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் அது நாட்டிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.