விஜயகலாவிடம் 3 மணிநேரம் விசாரணை
24 Jul,2018
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டுமென உரையாற்றிய முன்னாள் சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் இன்றைய தினம் (24) திட்டமிடப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான பிரிவு 3 மணி நேரம் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
மாலை 3 மணியிலிருந்து 6 மணிவரை விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது, தான் ஐக்கிய தேசியக் கட்சியை எழுச்சிக்காகவேயன்றி , விடுதலைப் புலிகள் அமைப்பின் மீளெழுச்சிக்காக உரையாற்றவில்லையென்றும்,குறித்த உரை கடுமையானதொன்றென தான் உணர்ந்தது குறித்த உரையின் பின்னர் இடம்பெற்ற சம்பவங்களின் பின்னரென்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா தெரிவித்திருப்பதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.