முல்லைத்தீவில் புலிகளால் பெரிய பீப்பாய்களில் இட்டு புதைத்துவைத்த தங்கங்கள் எங்கே?:
17 Jul,2018
வடக்கு மாகாணம் திடீரென தங்கத்திற்கு அமெரிக்காவினதும் தென்ஆபிரிக்காவினதும் தங்கச் சுரங்கங்களை விட பிரபலமடைந்துள்ளது.
ஏனென்றால் தங்கத்தைத் தேடி வடக்கிற்கு வந்த இரண்டு வெளிநாட்டவர்கள் பாதுகாப்புப் பிரிவினரிடம் அகப்பட்டுக் கொண்டுள்ளார்கள்.
கடந்த ஜுன் மாதத்தில் மாத்திரம் வடக்கில் தங்கம் தேடி வந்த இருப்பத்தேழு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அவர்களிடமிருந்து தங்கத்தைத் தேடுவதற்காக கொண்டு வரப்பட்ட எட்டு ஸ்கானர் இயந்திரங்களும் வடக்கு பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வடக்கிற்கு தங்கத்தைத் தேடி வரும் நபர்கள் பாதுகாப்புப் பிரிவினரால் ஏன் கைது செய்யப்படுகின்றார்கள் என்பது வடக்கு மக்கள் அறிந்ததே.
ஆனால் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலுள்ளவர்களுக்கு இது பெரும் கேள்வியாகும்.
ஏனைய பிரதேசங்களிலிருந்து தங்கத்தைத் தேடி வடக்கிற்கு வருபவர்கள் அதிகமாக செல்வது முல்லைத்தீவு மாவட்டத்துக்குத்தான்.
அம்மாவட்டத்திலுள்ள வெள்ளமுள்ளிவாய்க்கால் போன்ற இடங்களுக்கே செல்கின்றார்கள்.
தங்கத்தைத் தேடி தெற்கிலிருந்து வடக்குக்கு வருபவர்கள் ஏன் முல்லைத்தீவுக்கு செல்கின்றார்கள்? அங்கு தங்கச் சுரங்கமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழலாம்.
ஆகவே இது குறித்து அறிய முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்து நான்கு வருடங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்ற பொலிஸ் பரிசோதகர் செந்தில் காந்தன் சூரியகுமாரை சந்தித்தோம்.
“முல்லைத்தீவில் குழிகளிலுள்ள தங்கத்தைத் தோண்டி எடுக்க ஏனைய பிரதேசங்களிலுள்ள மக்கள் இன்று நேற்றல்ல, யுத்தம் இடம்பெற்ற வேளையிலும் இங்கு வந்தார்கள்.
ஆனால் யுத்த காலத்தில் இவ்வளவு தங்கக் குழிகள் தோண்டப்பட்டதாக நாம் அறியவில்லை.
அவ்வாறு தோண்டுவதற்கும் யுத்த காலத்தில் அனுமதி பெற முடிந்த அதிகாரம் பெற்றவர்களாலேயே இயலுமாக இருந்தது.
முல்லைத்தீவில் தங்கக் குழிகள் அதிகரித்தன. யுத்தத்தின் இறுதிக் காலங்களில்தான்ஸ அதற்குக் காரணம் தங்கத்தை விட உயிருக்கு மதிப்பு அதிகம் என்பதால்.
எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பினர் தங்களிடமிருந்த அனைத்து தங்கங்களையும் புதைத்து விட்டு தப்பிச் சென்றார்கள்.
எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பினருக்கும் தங்கம் தானாகக் கிடைக்கவில்லை. இவர்கள் ஆரம்பத்தில் மக்களிடம் எடுத்துக் கொண்டார்கள்.
அவ்வாறு பற்றுக் கொண்ட பெருமளவு தங்கத்தை தம்வசம் வைத்திருந்தார்கள். ஆரம்பத்தில் இரவு நேரம் வீடுகளுக்கு வந்து எடுத்துக் கொண்டார்கள்.
பின்னர் அவர்கள் தமிழ்த் திருமணங்களின் போது வழங்கப்படும் வரதட்சணையில் நூற்றுக்கு இருபது வீத தங்கவரியை விதித்தார்கள்.
தமிழர்களின் திருமணத்தின் போது முதலிடம் வகிப்பது தங்கமாகும். தமிழ் கலாசாரப்படி பெண் பிள்ளைகளுக்கு திருமணத்தின் போது வரதட்சணை வழங்குவார்கள். தங்க நகைகளும் வழங்கப்படும்.
எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பு இந்த திருமணத்தைப் பார்த்து வழங்கப்படும் வரதட்சணைக்கு அமைய தங்கத்துக்கு நூற்றுக்கு இருபது வீத கமிஷன் பெற்றார்கள்.
இதன் மூலமும் அவர்களுக்கு அதிகளவு தங்கம் கிடைத்தது. யுத்த நிலைமை மோசமாகிய போது வடக்கிலிருந்து ஒருவர் இருவராக வடக்கை விட்டு வேறிடங்களுக்கு செல்லத் தொடங்கினார்கள்.
அவர்களை உடனே வெளியேற எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பினர் விடவில்லை. இயக்கத்துக்கு ஒரு பிள்ளை வழங்குமாறு நிர்ப்பந்தித்தனர்.
அதனை நிறைவேற்ற முடியாத போது அதற்குப் பதிலாக தங்கத்தையே கேட்டார்கள்.
தமிழ் சமூகத்தில் தங்கத்துக்கு முக்கிய இடமுள்ளது. அதற்கு எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பும் விதிவிலக்கல்ல.
இவ்வாறு தங்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்தார்கள். பின்னர் ஈழம் வங்கியை ஆரம்பித்தார்கள். அதன் மூலம் நகையை ஈடுபிடித்தார்கள். அதன் மூலமே அவர்களுக்கு அதிகளவு தங்கம் கிடைத்தது.
இவ்வாறு அடகுபிடித்த தங்கத்தை எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பினர் கிளிநொச்சியை கைவிட்டு செல்லும் போது வெள்ளை நிற பைகளில் இட்டு லொறிமூலம் முல்லைத்தீவுக்கு கொண்டு செல்வதை கண்டோம்.
கிளிநொச்சி ஈழம் வங்கியை இராணுவம் கைப்பற்றியது. ஆனால் அவசரமாக கொண்டு செல்ல முடியாத ஓரளவு தங்கம் இராணுவத்தினரின் வசமாகியது.
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அடகுச் சீட்டுக்களை காட்டிய, தங்க நகைகளை வாங்கிய பற்றுச்சீட்டுகளை காட்டிய இருநூறு குடும்பங்களுக்கு அவர்களின் தங்கம் மீள கையளிக்கப்பட்டது.
இறுதியில் யுத்தத்தில் தோல்வியடையும் போது அவர்கள் இரவு நேரங்களில் பெரிய பீப்பாய்களில் தங்கத்தை இட்டு பெகோ மூலம் குழிகளை வெட்டி நிலத்தில் புதைத்தார்கள்.
இந்த தங்கத்தை தேடியே முல்லைத்தீவுக்கு படையெடுக்கின்றார்கள். இது சட்டவிரோத செயலாகும். அதனால் எல்.ரீ.ரீ.ஈ.யினர் புதைத்த தங்கம் யாருக்கும் சொந்தமில்லை.
நான் பொலிஸில் கடமை புரிந்த வேளையில் அங்கே தங்கம் புதைக்கப்பட்டுள்ளது, இங்கே தங்கம் புதைக்கப்பட்டுள்ளதெனக் கூறுவார்கள்.
அவ்வேளையில் நாம் நபர்களிடமிருந்து பெற்ற தகவல்களை நீதிமன்றில் சமர்ப்பித்து அந்த குறிப்பிட்ட இடத்தை தோண்ட அனுமதி பெறுவோம்.
இதனை பொலிஸாரால் மட்டும் தனியே செய்ய முடியாது. நீதிபதியோ அல்லது நீதிமன்றம் அதிகாரம் வழங்கிய ஒருவரோ அந்த இடத்துக்கு சமுகமளிக்க வேண்டும்.
ஏனைய பாதுகாப்புப் பிரிவு உயரதிகாரிகளையும் அழைக்க வேண்டும் வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் என்பவற்றையும் அழைக்க வேண்டும்.
எனது முன்னிலையில் பதினான்கு குழிகள் தோண்டப்பட்டன. இராணுவத்துக்கு கிடைத்த தகவலின்படி நீதிமன்ற உத்தரவின்படி பொலிஸாரால் தோண்டப்பட்டது. அதிலிருந்து ஒரு மஞ்சாடி தங்கமாவது கிடைக்கவில்லை.
பாதுகாப்புப் பிரிவினருக்கு புதைக்கப்பட்ட தங்கம் தொடர்பாக அன்று எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பில் இருந்தவர்களே உளவு சொல்கின்றார்கள்.
அவர்கள் புனர்வாழ்வு பெற்றவர்கள். அவர்களிடம் பெற்ற தகவல்களின்படி சரியான தவல்களைப் பெற்று தங்கத்தை அடைந்தவர்களும் இருக்கின்றார்கள்.
அதேவேளை தங்கத்தை தோண்டச் சென்று முல்லைத்தீவு நகருக்குள் நுழைவதற்கு முன்னரே கைது செய்யப்பட்டவர்களும் இருக்கின்றார்கள்.
கடந்த ஜுன் மாதம் ஸ்கான் இயந்திரம் ஒன்றுடன் முல்லைத்தீவை நோக்கி பயணம் செய்தவர்கள் பொலிஸாரால் வவுனியாவில் கைது செய்யப்பட்டார்கள்.
அதில் ஒருவர் இராணுவப் படையில் சிலகாலம் முல்லைத்தீவு பிரதேசத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மேஜராவார்.
அவர்களால் எல்.ரீ.ரீ.ஈ.யினரின் தங்கம் புதைக்கப்பட்ட இடத்தை கண்டுபிடிக்க கொண்டு செல்லப்பட்ட ஸ்கானரின் பெறுமதி ரூபா ஐம்பது இலட்சமாகும்.
இறுதியில் அவர்களுக்கு தங்கம் கிடைக்கவுமில்லை. ஸ்கானர் இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
அது மாத்திரமல்ல சிறையிலும் அடைக்கப்பட்டார்கள். இலங்கை விமானப் படை அங்கத்தவர்கள் மூன்று பேர் முல்லைத்தீவில் தங்க வேட்டை நடத்திய போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்கள்.
எல்.ரீ.ரீ.ஈ. அங்கத்தவர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களின்படி நீதிமன்ற உத்தரவின்படி தங்கத்தை தேடி நடத்தப்பட்ட அகழ்வுகள் மூலம் அரசாங்கத்துக்கு ஒரு கிராம் தங்கம் கூட கிடைக்கவில்லை.
தங்கம் அனைத்தும் யாருக்கும் தெரியாமல் காணாமற் போயுள்ளதாக தெரிகின்றது. ஆனால் இன்னும் தங்கம் எஞ்சியிருக்கும் என்ற நம்பிக்கையில் அதனைத் தேடிக் கொண்டு திருட்டுத்தனமாக முல்லைத்தீவுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையிலும் குறைவிருக்காது.
ரசுல தில்ஹார கமகே