மரண தண்டனை குறித்த ஜனாதிபதியின் முடிவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் எதிர்ப்பு!
16 Jul,2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மரண தண்டனை தொடர்பில் எடுத்துள்ள முடிவுக்கு ஐரோப்பியம் ஒன்றியம் எதிர்ப்பை வெளியிடவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திர தூதரகங்களை கோடிட்டு ஆங்கில ஊடகம் ஒன்று இதனைக் குறிப்பிட்டுள்ளது
இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தமது கரிசனையை இலங்கைக்கு தெரியப்படுத்தும். ஐரோப்பிய ஒன்றியத்தை பொறுத்தவரையில் அது மரண தண்டனைக்கு எதிரான கொள்கையை கொண்டிருக்கிறது. இந்தநிலையிலேயே இலங்கைக்கும் தமது நிலைப்பாட்டை அது அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது