பாதாள உலகுக்கு சிம்ம சொப்பன அதிகாரியை கொலை செய்தால் 50 லட்சம் பணம்
15 Jul,2018
–
புலனாய்வுத்துறை பொறுப்பதிகாரியும், பாதாள உலகக் குழுக்களுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கும் விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஈ.எஸ்.தர்மப்பிரியவை படுகொலை செய்தால் ஐம்பது லட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என்று பாதாள உலகக்குழுக்களின் தலைவர் மாகந்துரே மதுஸ் அறிவித்துவித்துள்ளார்.
குறித்த புலனாய்வுத்துறை பொறுப்பதிகாரியின் சாரதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஐம்பது லட்சம் ரூபாய் வழங்குவதாகவும், அதற்காக அதிகாரி தர்மப்பிரியவை கொலை செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
டுபாயில் வசித்து வரும் மதுஸ் புலனாய்வுத்துறை பொறுப்பதிகாரியை படுகொலை செய்வதற்கு அண்மையில் பல முறை முயற்சித்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.
அந்த பொறுப்பதிகாரியை கொலை செய்தால் 50 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்குவதாகவும், அவ்வாறு செய்யத் தவறினால் சாரதியின் சகோதரரை கொலை செய்து விடுவதாக அச்சுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாதாள உலகக்குழு செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை முடக்கும் நோக்கில் இந்த படுகொலை முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது