வவுனியாவில் காட்டுத் தீ - 10 ஏக்கர் மரங்கள் எரிந்து நாசம்!
14 Jul,2018
வவுனியா -குருந்துபிட்டி பகுதியில் குடியிருப்புக்கு பின்பாகவுள்ள காட்டுப்பகுதி இன்று பகல் திடீரெனத் தீப்பற்றி எரிந்தது இன்று மதியம் 1 மணியளவில் காட்டில் தீ பிடித்ததுடன் காற்றின் வேகம் அதிகரித்ததால் எல்லா இடங்களுக்கும் தீ பரவியது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த இரட்டைபெரியகுளம் பொலிஸார், வவுனியா நகரசபை தீ அணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.