இலங்கையில் பேருந்தை வழிமறித்து வாழைப்பழத்தை பறித்த காட்டு யானை!- (VIDEO)
13 Jul,2018
இலங்கையில் காட்டு யானை ஒன்று பேருந்தை வழிமறித்து வாழைப்பழத்தை பறித்து உண்ணும் காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.
கட்டராகம (Kataragama) என்ற இடத்தில் பேருந்தை வழிமறித்த காட்டு யானை ஒன்று சாரதியின் பகுதிக்கு வந்து துதிக்கையை பேருந்தின் உள்ளே நுழைத்தது.
இதில் பேருந்துக்கும் யானையின் துதிக்கைக்கும் இடையே சிக்கிக் கொண்ட சாரதி படாதபாடு பட்டார்.
இறுதியில் பேருந்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த வாழைப்பழத்தை வலுக்கட்டாயமாக எடுத்துக் கொண்டது அந்த யானை. இதனையடுத்து பேருந்தை நகர்த்திய பின்னரும் அடுத்த சீப் வாழைப்பழத்திற்காக பேருந்தை காட்டு யானை விரட்டியது.