பிள்ளையானின் இன்றுடன் 1000 நாட்கள்!சிறைவாசம் -
11 Jul,2018
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், சிறைச்சாலையில் 1,000 நாள்களைக் கழித்துள்ளார். இன்றுடன் அவர் தொடர்ச்சியாக 1000 நாட்கள் விளக்கமறியலில் இருந்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு பிரிவுக்குச் சென்றிருந்தபோது, 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதியன்று, அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீதான விளக்கமறியலில் நீதிமன்றத்தால் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையிலேயே, இன்றுடன் 1,000 நாள்களை அவர் சிறையில் கழித்துள்ளார்.