கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணா கொழும்பில் படுகொலை!
09 Jul,2018
கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான எஸ்.கே.கிருஷ்ணா இன்று காலை கொழும்பு செட்டியார் தெருவில் சுட்டுக் கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரே கிருஷ்ணா மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நவோதய மக்கள் முன்னணியின் தலைவர் எஸ்.கே. கிருஷ்ணா, உள்ளூராட்சித் தேர்தலில் சுயேட்சைக் குழுவாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று கொழும்பு மாநகர சபைக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இவரது படுகொலைக்குப் பின்னால் அரசியல் பின்னணிகள் இருக்கலாம் என்று வலுவான சந்தேகங்கள் எழுந்துள்ளன