பிரபாகரனுக்கு பணம் – கருணாவுக்கு பதவி – இராணுவ தளபதிக்கு சிறை – விஜயகலா பற்றி பேசலாமா?
05 Jul,2018
விஜயகலா மகேஸ்வரனின் புலிகள் பற்றிய கருத்திற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நிலைப்பாட்டில் ஐக்கியதேசியக் கட்சியும் அரசாங்கமும், தானும், ஜனாதிபதியும் இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டள்ள அவர், “விஜயகலா மகேஸ்வரனின் கருத்து குறித்து அறிந்துக்கொண்டதும் நான் சபாநாயகருடன் பேசினேன். அது தொடர்பாக ஆராய்ந்தேன்.
எமது மூன்று அரசியல் குழுக்கள் கூடின. திருமதி மகேஸ்வரன் பற்றி கலந்துரையாடினோம். அவர் சுகவீனமான நிலையில் யாழ்ப்பாணத்தில் இருப்பதாக தெரியவந்தது.
கொழும்பு திரும்பியதும் சந்திக்குமாறு அறிவிக்கப்பட்டது. அத்துடன் விசாரணை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. விஜயகலாவை சந்தித்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் எப்போதும் அந்த நிலைப்பாட்டில் இருக்கிறோம்” என பிரதமர் றணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
யுத்தத்திற்ககா முப்படையினர், பொலிஸார், சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களும் அர்ப்பணிப்புகளை செய்தனர்.
நாட்டை பிரிக்காது தக்கவைக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். பயங்கரவாதிகள் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், எமது கட்சியின் தலைவர்களை கொலை செய்தனர். நாட்டின் அடிப்படை சட்டங்களுக்கு முரணாக நடந்துக்கொண்டதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
விடுதலைப் புலிகள் நாட்டை பிரிக்க மட்டுமல்ல, பாராளுமன்றத்தை செயலிழக்க செய்தனர். 600 பொலிஸாரை கொன்ற கருணாவுக்கு கட்சியின் உப தலைவர் பதவியை கொடுத்தனர்.
பிரபாகரனுக்கு பணத்தை கொடுத்து ஜனாதிபதித் தேர்தலில் வென்றனர். விடுதலைப் புலிகளை தோற்கடித்த இராணுவ தளபதியை சிறையில் அடைத்தனர். அப்படி செய்தவர்கள் எப்படி இன்று அவை பற்றி பேச முடியும்? எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.