ஊடகவியலாளர்களை அச்சுறுத்த வேண்டாம், எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்! -
03 Jul,2018
அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் செய்தி வெளியிட்ட தமது இரண்டு ஊடகவியலாளர்களை மஹிந்த ராஜபக்சவுடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் மைக்கல் ஸ்லெக்மேன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர், “குறித்த செய்தி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்திருந்தால் அதனை எமது ஊடகத்தின் சிரேஸ்ட ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டிருக்க வேண்டும். மாறாக இலங்கை ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதில் பயனில்லை. ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவது எந்த வகையிலும் பொருத்தமற்றது.
அண்மையில் இந்த செய்தியை எழுதிய ஊடகவியலளார்களை மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் விமர்சனம் செய்திருந்தனர். ஊடகவியலாளர்களை இவ்வாறு அச்சுறுத்துவது பொருத்தமற்றதாகும், இவ்வாறான நடவடிக்கைகள் இலங்கையின் ஊடக சுதந்திரத்தை பாதிப்பதுடன், முக்கிய தகவல்களை வெளியிடக்கூடிய சந்தர்ப்பங்களை முடக்கும் வகையில் இது அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்