பஸ் – வேன் மோதி விபத்து இருவர் பலி; மூவர் காயம் :
27 Jun,2018
மட்டக்களப்பு – திருமலை நெடுஞ்சாலையின் கிரான் பிரதேசத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நள்ளிரவு தனியார் சொகுசு பேருந்துடன் வேன் ஒன்று நேருக்குநேர் மோதியதில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் வேன் சாரதியான கல்லடி நொச்சிமுனையைச் சேர்ந்த பாலச்சந்திரன் வினோஜன் (வயது 24) மற்றும் கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த பிரகாஸ் கெல்வின் (வயது 11) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த மூவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பேருந்தும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை நோக்கி வந்த வேனும் நள்ளிரவு வேளையில் கிரான் இலங்கை வங்கி கிளைக்கு முன்பாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்