ஒருபாலுறவு மனைவியை பழிதீர்க்க நண்பர்களுக்கு இரையாக்கிய கணவன்

17 Jun,2018
 

 
ஒரு பாலுறவில் நாட்டம் கொண்டிருந்த பெண் ஒருவரைப் பழிவாங்க விரும்பிய கணவர், தமது நண்பர்களை வைத்து அவரை வன்புணர்வு செய்ய வைத்ததாக இலங்கை ஒருபால் உறவு அமைப்பு ஒன்றின் முன்னாள் உறுப்பினரும் சமூக ஆர்வலருமான மனோஜ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கையில் அந்த அமைப்பு நடத்திய கருத்தரங்கம் ஒன்றில் பேசியபோது மனோஜ் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
''தன் மனைவி வேறொரு பெண்ணை விரும்புவதாகவும் அவருடனே உறவு வைத்துக் கொண்டுள்ளதாகவும் லியோனாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கணவர் நண்பர்களிடம் புலம்பினார். இதனைக் கேட்டுக்கொண்டிருந்த அவரது ஐந்து நண்பர்கள், அவருக்கு மனைவியை எவ்வாறு கையாள்வது (உறவுகொள்வது) என்று தெரியவில்லை. அதனால்தான் அவர் ஒரு பெண்ணை நாடியுள்ளார். எங்களிடம் விட்டுவிடு, எப்படி கையாள்வது என்பதை நாங்கள் காண்பிக்கிறோம் கூறியுள்ளனர். வெறுப்பில் இருந்த கணவரும் அதற்கு சம்மதித்தார். ஓர் இரவில் ஐந்து நண்பர்கள், கணவர் முன்னிலையில் அந்த இளம் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தனர்," என்று மனோஜ் தெரிவித்தார்.
"இந்தக் கொடூர சம்பவம் நடப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்தான் லியோனா திருமணம் நடந்தது. அப்போது அந்த இளம் பெண் திருமணத்தில் விருப்பமின்றி இருக்க அவரது தாய் வலுக்கட்டாயமாக அப்பெண்ணுக்கு திருமணம் செய்துவைக்கிறார். ஆனால், லியோனாவால் திருமண வாழ்க்கையில் நாட்டம் கொள்ள முடியவில்லை. காரணம் அவருக்கு வேறொரு பெண் மீதே விருப்பம் இருந்தது. அவருடனே உறவுகொள்வதில் நாட்டமாக இருந்தார் லியோனா," என்றும் தெரிவித்தார் மனோஜ்.
 

"ஒரு வருடம் கணவருடன் விருப்பமின்றி வாழ முயற்சித்த அப்பெண் மீண்டும் தன் தாய் வீட்டிற்கே சென்றுவிடுகிறார். கணவர் அவளை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். சமாதானப்படுத்த முயற்சித்த கணவரிடம், தனது மனதிலுள்ள விருப்பத்தைத் தெரிவிக்கிறார் லியோனா. அதனைக் கேட்ட கணவர் மனமுடைந்து போகிறார். எனினும் பிறகு சமாதானப்படுத்தி அவரை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார் அவரது கணவர். இந்த ரகசியங்களை தனது நண்பர்களுடன் குடிபோதையில் பகிர்ந்துகொண்டார் அவர்," என்றும் மனோஜ் குறிப்பிட்டார்.
''எங்களை சேர்ந்து வாழவிடவில்லை'' - பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் தற்கொலை
ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சிறிது காலம் சுதந்திரம் கொடுத்த ரஷ்ய புரட்சி
இதன் பின்னரே நண்பர்களால் கணவர் முன்னிலையில் அந்தப் பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கர்ப்பமடைந்தார். அந்த குழந்தையின் தந்தை, அந்த ஐந்து பேரில் யார் என்றுகூட அவருக்குத் தெரியவில்லை. அதனால் அந்தக் குழந்தையைப் பார்க்கும்போதெல்லாம் அவருக்கு வெறுப்பாகவே இருக்கிறது. அவர் தற்போது நுவரெலியாவில் ஒரு தேவாலயத்தின் மடத்தில் தனது வாழ்க்கையைக் கழித்து வருகிறார் என்று குறிப்பிட்டார் மனோஜ்.
ஒரு பெண்ணின் உணர்வுகள் மதிக்கப்படாததால் அவரது மனித உரிமையும், உணர்வுகளும் மிதிக்கப்படுகின்றன. இது ஒரு சம்பவம் மட்டுமே. இப்படி ஏராளமான சம்பவங்களும், உண்மைக் கதைகளும் இருக்கின்றன என்று மேலும் தெரிவிக்கிறார் மனோஜ்.
தான் விரும்பிய வாழ்க்கை கிடைக்கவில்லை என்ற ஏமாற்றம். வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்த வாழ்க்கையில் வெறுப்பு. ஐந்து காமுகர்களினால் பாலியல் பலாத்காரம் என்று லியோனாவின் வாழ்க்கை இருண்டு போயுள்ளது. இதற்கான ஒரே காரணம் அவர் ஓரினச் சேர்க்கையாளர் என்பதே! அவரது உணர்வுகளை யாரும் மதிக்கவில்லை என இந்தச் சமூகத்தின் மீது வெறுப்புகொள்கிறார் அவர் என்பது அவரது கருத்து.
 
LGBT என்று சுருக்காகமாக அழைக்கப்படும் ஓரினச் சேர்க்கையாளர்களும், திருநங்கைகளும் இலங்கையில் ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். சட்டங்களும் அவர்களுக்கு எதிராகவே உள்ளன. இந்த சமூகத்திற்காக EQUAL GROUND என்ற அரசு சார்பற்ற நிறுவனம் குரல்கொடுத்து வருகிறது. (LGBT என்பதன் விரிவாக்கம் - L: lesbian, G: Gay, B: Bisexual, T: Transgender)
ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் குறித்து ஊடகவியலாளர்களைத் தெளிவுபடுத்துவதற்கான விசேட செயலமர்வு ஒன்றையும் இந்த அரசு சார்பற்ற அமைப்பு அண்மையில் நடத்தியிருந்தது.
மேற்கத்திய கலாசாரத்தை இலங்கையில் பரப்ப முயற்சிப்பதாக LGBT சமூகத்திற்கு ஆதரவாக குரல்கொடுப்பவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்த சமூகத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்திருப்பதாக அந்த நிறுவனத்தின் ஸ்தாபகர் ரொசானா பெல்மர் தெரிவித்தார். சட்டமும் அவர்களுக்கு எதிராக இருப்பதால் அவர்கள் பெரும் சிக்கல்கள் எதிர்கொள்வதை அவர் தெளிவுபடுத்தினார்.
இதுகுறித்து இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரி மேனகா ஹேரத் பேசினார். அனைத்து மனிதர்களும் சமம் என்ற அடிப்படையில் ஓரினச் சேர்க்கையாளர், திருநங்கை ஆகியோரது அடிப்படை மனித உரிமைகளை உறுதிப்படுத்துவது மிக முக்கியமானது என அவர் விளக்கமளித்தார்.
 

இதுகுறித்து மேலும் விவரித்த மேனகா ஹேரத், ''இந்தச் LGBT சமூகத்தைச் சார்ந்தோரின் அடிப்படை மனித உரிமை மீறப்படுவதாக முறையிடும் சந்தர்ப்பங்களிலும், அதுகுறித்து மனித உரிமை ஆணைக்குழு பணியாற்றுகிறது. இலங்கையிலுள்ள 365-A என்ற சட்டத்தின் கீழ் இவர்கள் எவ்வாறு கைதுசெய்யப்படுகின்றனர் என்பது குறித்து நாம் விழிப்பாக இருக்கிறோம். இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் சட்டவிரோதமாகவே கைதுசெய்யப்படுகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் சட்டம் எவ்வாறு கையாளப்படுகின்றது என்பது குறித்து மனித உரிமை ஆணைக்குழு அக்கறை கொண்டுள்ளது.''
''சம்பந்தப்பட்ட நபர் யார் என்பது குறித்து மனித உரிமை ஆணைக்குழு கவனத்தில் கொள்ளாது. மனிதன் என்ற வகையிலேயே ஒருவரை ஆணைக்குழு பார்க்கிறது. அனைவருக்கும் உரிமைகள் இருக்கின்றன. அவர்களின் உரிமைகள் எவ்வாறு காக்கப்படுகின்றன என்பதிலேயே மனித உரிமை ஆணைக்குழு கரிசனை கொள்கிறது. LGBT சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முறையிட வந்தாலும் அவரையும் ஒரு மனிதராகவே ஆணைக்குழு பார்க்கிறது. அவரது உரிமையை உறுதிப்படுத்துவது மனித உரிமை ஆணைக்குழுவின் கடமையாக இருக்கிறது.''
‘ஓரினச்சேர்க்கை என்பது நோயல்ல’
அன்னத்துடன் ஒரு பால் உறவில் வாழ்ந்த வாத்து
''காரணம் அவர்களும் மனிதர்கள். சாதாரண மனிதர்களை விடவும் அவர்கள் பல சமயங்களில் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு யாருடைய உதவியாவது தேவைப்படுகிறது. சமூகத்தில் அவர்களுக்குள்ள பிரச்சினைகளினால் அவர்கள் முன்வர விரும்புவதில்லை. அத்துடன் முன்வர அஞ்சுகின்றனர். இதனால் அவர்கள், உரிமைகள் அற்ற நிலையில் வாழ்கின்றனர்.''
''இத்தகையவர்கள் தன்னைத்தானே வருத்திக் கொள்கின்றனர். வாழ முடியாத காரணத்தினால் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதற்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன. பெரும்பாலானவர்களை குடும்பங்கள் ஒதுக்கிவைத்துள்ளன. தமக்கான அடையாளத்தைத் தொலைத்து வாழ்கின்றனர். தாம் யார் என்ற கேள்வியுடன் அவர்கள் வாழ்கின்றனர். அவர்கள் யார் என்பதைத் தேடிச் செல்லும் தைரியம் அவர்களிடம் இருக்கிறது.''
 

''இந்த முயற்சிக்கு மனித உரிமை ஆணைக்குழுவினால் உதவ முடியும். ஊடகம் என்ற ரீதியில் உங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பிருக்கிறது. ஊடகங்கள் அறிக்கையிடும் விதத்தைப் பொறுத்தே சரி, பிழை எது என்பதை மக்கள் தீர்மானிக்கின்றனர். எனவே இந்த சமூகத்தினர் குறித்த செய்திகளைப் பதிவிடும்போது மிகவும் அவதானமாக கையாளுமாறு கோருகிறோம்'' என்று அவர் கூறினார்.
இதுகுறித்து சட்டத்தரணியும், ஊடகவியலாளருமான ரதிகா குணரத்னவிடம் பேசினோம்.
''உண்மையில் இவர்களுக்கு அனைத்து வகையிலும் அநீதி இழைக்கப்படுகிறது. ஒருவரின் உணர்வுக்கு மதிப்பளிக்க மறுப்பது என்பது கொடுமையானது. உணர்வுகளால் ஈர்க்கப்பட்ட இவர்கள் பழகும்போது சட்டம் இதனைத் தடுக்கிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் 365-A என்ற சட்டம் இவர்களுக்கு எதிரான நெருக்கடிகளை மேலும் அதிகரிக்கச் செய்கின்றது. இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது கைது செய்யப்படும்போது, போலீசார் இவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதில்லை.''
 

''இவர்களை கையாளும் வழிமுறைகள் முற்றிலும் பிழையாகவே இருக்கின்றன. இதுகுறித்து எமக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதிலும் இன்னுமொரு கொடுமையான விடயம் என்னவெனில், உள்ளூர் ஊடகங்களும் இவர்கள் விடயத்தில் பாரபட்சமாக செயல்படுகின்றன. அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். அவர்களும் மனிதர் என்பதை மதிக்க முயற்சிக்க வேண்டும். குறைந்த பட்சம் LGBT சமூகத்திற்கு ஆலோசனை பெற்றுக்கொள்ள உதவும் தொலைபேசி இலக்கத்தை விளம்பரமாக பிரசுரிக்கக்கூட பத்திரிகைகள் மறுக்கின்றன.''

''இதனைப் பிரசுரித்தால் அந்த ஊடகங்கள் மீது எதிர்ப்புக்கள் ஏற்படும் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. இந்த சமூகம் குறித்தும், அவர்களின் உணர்வுகள் குறித்தும் பேசுவது மிக முக்கியமானது. இந்த சமூகத்தினர் பாதிக்கப்படும்போது அதனை ஊடகங்கள் கையாளும் விதமும், செய்திகள் வெளியாகும் விதமும் மிகவும் கவலையளிக்கிறது. செய்தியாளர்கள் இதில் அதிக அக்கறைகொள்ள வேண்டும். அவர்களின் உணர்வுகளை மதித்து, அவர்களின் கோணத்திலும் அந்த சம்பவங்களைப் பார்க்க வேண்டும்" என்று கூறினார்.
 

ஊடகங்கள் LGBT சமூகத்தின் மீது அக்கறைக் கொள்வது இன்னுமொருவர் உயிரை மாய்த்துக் கொள்வதைத் தடுக்க உதவ வேண்டும் என இந்த சமூகத்திற்காக நீண்ட நாட்களாக குரல்கொடுத்து வருபவரும், சமூக ஆர்வலருமான துஷார மனோஜ் தெரிவித்தார்.
''ஓரினச் சேர்க்கையாளர் குறித்து கிடைக்கும் செய்திகளும், அவர்களின் அனுபவங்களும் கசப்பானதாகவே இருக்கின்றன. திருநங்கைகள் சமூகத்தில் பாலியல் பொருளாக பார்க்கப்படுகின்றனர். பாலியல் இச்சைக்காக இவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் தரப்பினர்கூட இவர்களை இழிவாக பேசுவதும் நடத்துவதும் வேதனைகொள்ள வைக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். குறைந்தபட்சம் அவர்கள் ஆசைப்படும் அடையாளத்தை நாம் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இதற்காக அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்கள் குறித்து பேச வேண்டும். இந்த முயற்சி, இன்னுமொரு தற்கொலை முயற்சியையும், இன்னுமொரு உயிர்ப் பலியையும் நிச்சயம் தடுக்கும்'' என அவர் கூறினார்



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies