8 மில்லியன் ரூபாவை கொள்ளையடித்த இளைஞர்கள்
17 Jun,2018
ATM இயந்திரத்தில் 8 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையடித்த இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இருவரும் 8,078,000 ரூபாய் பணம் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நீர்கொழும்பு மற்றும் ஜாஎல பிரதேசத்தில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்ட நீண்ட விசாரணையின் பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை குரன பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர்களிடம் இருந்து 2,800,000 ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளது.
அவ்வாறு மோசடி செய்த பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களையும் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது