இலங்கையில் அதிபர் சிறிசேனா மந்திரி சபையில் தமிழர் உள்பட 7 பேர் புதிதாக சேர்ப்பு
12 Jun,2018
இலங்கை அதிபர் சிறிசேனா தனது மந்திரிசபையை விரிவாக்கம் செய்துள்ளார். இதில், அந்நாட்டு பொதுத்தேர்தலில் ஆளும் இலங்கை சுதந்திரா கட்சி சார்பாக வெற்றி பெற்றுள்ள ஒரே தமிழரான, திரிகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் உள்பட 7 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த 7 பேரில், 2 பேர் மந்திரிகளாகவும் 5 பேர் இணை மந்திரிகளாகவும் நியமணம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கை அதிபர் மாளிகையில் இன்று மந்திரிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.
தமிழரான அங்கஜன் ராமநாதன் இணை மந்திரியாக நியமணம் செய்யப்பட்டுள்ளார். புதிய அமைச்சர்களில் 5 பேர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது