பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி எச்சரிக்கை!
10 Jun,2018
பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை தனது வதிவிடத்துக்கு அழைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையாக எச்சரித்துள்ளார். தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை கைவிட்டு பதவி பொறுப்புகளை சரியான முறையில் நிறைவேற்றுமாறு ஜனாதிபதி எச்சரித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு பொலிஸ் மா அதிபர் அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த காலங்களில் அதிகரித்துள்ள குற்றங்கள், கொள்ளைகள், பாதள உலக நடவடிக்கைகள், கடத்தல், போன்றவைகள் அதிகரித்துள்ளமை குறித்து நேரடியாக பொறுப்பு கூற வேண்டியவர் பொலிஸ் மா அதிபரே என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தனது கடமை எது என்பதனை உரிய முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி சட்டம் சமாதானத்துடன் செயற்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கூறியுள்ளார்.அதிகம் பேசுவதனை நிறுத்தி விட்டு பொலிஸ் மா அதிபரின் கடமையை உரிய முறையில் நடத்தி செல்லுமாறு ஜனாதிபதி எச்சரித்துள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.