இலங்கையில் முன்னேற்றம் தேவை! - ஐரோப்பிய ஒன்றியம்
08 Jun,2018
இலங்கையில், மதங்கள், இனங்களுக்கு எதிரான வெறுப்பூட்டும் பேச்சுகள் மற்றும் இனங்களுக்கு இடையிலான அமைதி போன்ற விடயங்களில் முன்னேற்றம் அவசியம் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியம்- இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் மூன்றாவது செயற்குழு கூட்டத்தின்போது இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்பட்டமை, தகவல் அறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்தியமை போன்ற இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இதன்போது வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஊடக சுதந்திரம் உட்பட்ட இனங்களுக்கு இடையிலான அமைதி, சகிப்புத்தன்மை என்ற விடயங்களில் கவனம் தேவை என்பதை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
இதேநேரம், இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு விடயங்கள் மேம்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே ஜீஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை மீண்டும் வழங்கப்பட்டதையும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.