தாமரைக் கோபுரத்தில் இருந்து விழுந்து கிளிநொச்சி இளைஞன் பலி!
08 Jun,2018
கொழும்பில் அமைக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தில், கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்டுள்ள மின்பாரந்தூக்கியிலிருந்து விழுந்து கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பலியானார். இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
145 மீட்டர் உயரத்தில் இருந்து குறித்த இளைஞன் விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் இருந்த மின் தூக்கி பூர்த்தி செய்யப்படாத மின் தூக்கி ஒன்று என தெரிவிக்கப்படுகின்றது. இறந்தவர், கிளிநொச்சி, அக்கராயன்குளம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய கோணேஸ்வரன் நிதர்ஷன் என்ற இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்