தெற்காசியாவின் உயரமான கட்டடம்! - கொழும்பில் கட்டப்படுகிறது
06 Jun,2018
தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை சீன நிறுவனம் ஒன்று கொழும்பில் அமைக்கவுள்ளது. இந்தக் கட்டடத்தை அமைக்கும் பணிகள் 2021ஆம் ஆண்டில் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 376 மீற்றர் உயரத்தையும் 92 தளங்களையும் கொண்டதாக இந்தக் கட்டடம் அமைக்கப்படவுள்ளது.
கொழும்பு 1, ட்ரான்ஸ்வேக்ஸ் சதுக்கத்தில் மூன்று கோபுரங்களைக் கொண்ட இந்தக் கட்டடம் கட்டப்படவுள்ளது. THE ONE என்று அழைக்கப்படவுள்ள இந்தக் கட்டடம், பணியகங்கள், வதிவிடங்கள், ஆடம்பர சில்லறை வணிக வளாகம், பல மாடி வாகனத் தரிப்பிடம், மண்டபம், ஹெலிகொப்டர் இறங்குதளம் உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டதாக இருக்கும்.