திருகோணமலையில் ஆலயத் திருவிழாவில் வாள்வெட்டு! - 6 இளைஞர்கள்
06 Jun,2018
திருகோணமலை - சல்லியில் ஆலய வருடாந்த உற்சவத்திற்கு சென்ற இரு குழுக்களுக்கிடையே நேற்றிரவு 8.10 மணியளவில் இடம் பெற்ற மோதலில் வாள்வெட்டுக்கு இலக்காகிய நிலையில் ஆறு பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாள்வெட்டுக்கு இலக்கானவர்கள் திருகோணமலை, திருக்கடலூர் பகுதியை சேர்ந்த எஸ்.தக்ஸன் (28வயது), ஆனந்தபுரி,02ம் ஒழுங்கையைச் சேர்ந்த கே.சுலக்ஸன் (18வயது) ,பல்லத்தோட்டம், முருகாபுரியைச் சேர்ந்த ஐே.புவிந்தன் (27வயது), மற்றும் திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த டி.ஐெயசாந் (25வயது), இலிங்கநகர் பகுதியைச் சேர்ந்த ஐே.பிரணவன் (26வயது), கும்புறுபிட்டி,நாவற்சோலை பகுதியைச் சேர்ந்த வீ.விஐிதரன் (23வயது) ஆகியோர் என தெரியவருகின்றது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட கைகலப்பே வாள்வெட்டுக்கு காரணம் எனவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. குறித்த வாள் வெட்டு சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.