கொழும்பில் 300 ஆபாச விடுதிகள்! தீவிர நடவடிக்கையில் பொலிஸார்
05 Jun,2018
கொழும்பு மஹரகவில் செயற்பட்டு வரும் 300 ஆபாச விடுதிகள் பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் 300 விடுதிகள் இயக்குவதாக சட்டமா அதிபரிடம் தகவல் பெற சுகாதார அமைச்சர் தீர்மானித்துள்ளார்.
மாகாண சுகாதார ஆணையாளரின் கோரிக்கைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மஹரகம நகர சபை எல்லையில் மாத்திரம் இவ்வாறான 300 மசாஜ் நிலையங்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. அங்கு மசாஜ் நிலையம் என்ற பெயரில் பல விபச்சார விடுதிகள் நடத்திச் செல்லப்பட்டுள்ளன.
மசாஜ் நிலையங்களை நீக்குவதற்கு போதுமான சட்டம் தற்போது இல்லை. இது தொடர்பில் சட்டம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ள சட்டமா அதிபரிடம் தகவல் கோரப்பட்டு வருவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.