ஜெனிவாவில் இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உள்ள தாமதம் தொடர்பில்
05 Jun,2018
எனவே இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வைப்பதற்கும், தீர்மானம் நிறைவேற்றப்படாமல் ,இருப்பின் அது சம்பந்தமான முயற்சிகளை மேற்கொள்வதற்கும் எவ்விதமாக சர்வதேச சமூகம் செயற்பட வேண்டும் என்பதைப் பற்றி சர்வதேச சமூகம் சிந்தித்து ஒரு முடிவு எடுக்க வேண்டிய தேவை உருவாகிக்கொண்டு வருகின்றது.
இவ்வாறு தன்னை சந்தித்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பு வந்த அமெரிக்க காங்கிரஸ் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.இந்த சந்திப்பில் என்ன விடயங்களை பேசினீர்கள் என “புதிய சுதந்திரன்”சம்பந்தன் ஐயாவிடம் வினவியது. அதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்ஸஸஸஸ
ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதில் எவ்விதமான சந்தேகத்துக்கும் ,இடமில்லை.இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ,இலங்கை அரசாங்கம் கால அவகாசம் கேட்டு, அந்த கால அவகாசம் கொடுக்கப்படுவதைப் பாதிக்கப்பட்ட மக்கள் விரும்பாதபோதுகூட ,இலங்கை அரசாங்கத்தை அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற வைப்பதற்காக கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு பங்குனி மாதத்திற்கு முன்னர் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படல் வேண்டும்.இலங்கை அரசாங்கத்தினுடைய செயற்பாடுகள் ,இந்த விடயமாக திருப்திகரமாக அமைவதாகச் சொல்ல முடியாது. எனவே , தீர்மானத்தை நிறைவேற்ற வைப்பதற்கும், தீர்மானம் நிறைவேற்றப்படாமல் ,இருப்பின் அது சம்பந்தமான முயற்சிகளை மேற்கொள்வதற்கும் எவ்விதமாக சர்வதேச சமூகம் செயற்பட வேண்டும் என்பதைப் பற்றி சர்வதேச சமூகம் சிந்தித்து ஒரு முடிவு எடுக்க வேண்டிய தேவை உருவாகிக்கொண்டு வருகின்றது.
,இந்தக் விடயத்தில் சர்வதேச சமூகம் ஒரு பார்வையாளராக ,இருக்க முடியாது. தீர்மானம் நிறைவேற்றப்படா விட்டால் அவர்கள் பாதிப்படைந்த மக்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களுடைய உரிமைகளைப் பெறுவதற்கும் தீர்மானத்தின் அடிப்படையில் எதைச் செய்ய வேண்டுமோ, அதை அவர்கள் செய்ய வேண்டும். ,இந்தக் கருத்தையே நாங்கள் அமெரிக்காவில் ,இருந்து வந்த காங்கிரஸ் உறுப்பினர்களுக்குத் தெளிவாகக் கூறியிருந்தோம். எமது நிலைப்பாட்டை அவர்கள் புரிந்துகொண்டார்கள். ,இந்தக் விடயம் சர்வதேச சமூகத்தினால் பரிசீலிக்கப்பட வேண்டிய விடயம் என்பதையும் அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என தெரிவித்தார்.