மன்னாரில் 07வது நாளாக அகழ்வு தொடர்கின்றது
05 Jun,2018
மன்னார் , சதோச விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் தொடர்பான அகழ்வு பணி இன்று 7 ஆவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றதுஸ
நேற்றைய தினத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதி நிதி மிராக் ரஹீம் மற்றும்,குறித்த அலுவலகத்தின் சட்டத்தரணி வருன திசேரம் ஆகிய இருவரும் நேரடியாக சென்றிருந்தனர்.
நேற்றைய தின அகழ்வுகளின் போது,மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக மன்னார் நீதவான் நிதிமன்றில் ஆஜராகும் சட்டத்தரணிகள் மற்றும் லங்கா சதோச விற்பனை நிலையம் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணிகளும் அகழ்வுப் பணிஇடம்பெறும் இடத்திற்கு வருகைதந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்று காலை குறித்த இடத்திற்கு வருகைதந்த மன்னார் நீதவான் நீதிமன்ற நிதிபதி ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் போது விசேட சட்ட வைத்திய நிபுனர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர்,களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினர், விசேட தடவியல் நிபுனத்துவ பொலிஸார் , மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள்,சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதி நிதி மிராக் ரஹீம் மற்றும்,குறித்த அலுவலகத்தின் சட்டத்தரணி வருன திசேரம் ஆகிய இருவரும் மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் சேகரிக்கப்பட்டு அகழ்வுகள் இடம் பெற்று வரும் மண் குவியல்களையும்,அங்கு இடம் பெற்று வருகின்ற அகழ்வுகளையும் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.