மஹிந்தவுக்கு ஸ்ரீ ல.சு.க.யின் ஆலோசகர் பதவியை வழங்க தீர்மானம்
03 Jun,2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகர் பதவியை பொறுப்பேற்பதாயின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அதற்கு நியமிப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவும், அகில இலங்கை செயற்குழுவும் இணைந்து இன்று தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் “அபேகம” வளாகத்தில் இன்று (03) கூடிய ஸ்ரீ ல.சு.க.யின் விசேட கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஸ்ரீ ல.சு.க.யின் பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.