பஸ்ஸில் பயணத்த மாணவனின் கை வீதியில் விழுந்தது!!
03 Jun,2018
பஸ்ஸில் பின்னிருக்கையில் யன்னல் ஓரமாக அமர்ந்து, யன்னலுக்கு வெளியே கையை போட்டுக்கொண்டு பயணித்த, பல்கலைக்கழக மாணவனின் கையை, டிப்பர் வாகனம் துண்டாடிய சம்பவமொன்று இரத்தினபுரியில் இடம்பெற்றுள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவனின் கையே இவ்வாறு துண்டாடப்பட்டுள்ளது.
துண்டாடப்பட்டு வீதியில் கிடந்த மாணவனின் கையுடன், அந்த மாணவன், இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இரத்தினபுரி-பதுளை வீதியில், பெல்மதுளை சன்னஸ்கம கிரிவெல்தெனிய சந்தியிலேயே, இன்று (03) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.