இலங்கைப் படைகளுடன் உறவுகளைப் பலப்படுத்த விரும்பும் அமெரிக்கா!
02 Jun,2018
இலங்கைப் படைகளுடனான உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்வதில் அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளதாக, அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே, அவர் இதனைக் கூறியுள்ளார்.
எமது பாதுகாப்பு ஒத்துழைப்பை இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் நன்மையளிக்கும் வகையில், விரிவாக்கிக் கொள்வதை அமெரிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.