பலாலி விமான நிலைய விரிவாக்கத்துக்கு 750 ஏக்கர் காணிகள் போதும்! - விமானப்படை
29 May,2018
பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு சுமார் 750 ஏக்கர் காணிகள் போதும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் விமானப் படையினர் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடுவதற்கு யாழ்ப்பாணம் சென்றிருந்த பிரதமர், முப்படையினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார். இந்த கலந்துரையாடலின் போதே அவரிடம் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டது.