227 பயணிகளுடன் இலங்கை விமானம் மயிரிழையில் தப்பியது
27 May,2018
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கொழும்புக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 227 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் சில விநாடிகளிலே ஓடுதள விளக்கில் மோதி விபத்துக்குள்ளானதில் விமானத்தின் சக்கரம் பலத்த சேதமடைந்தது.
கொச்சியிலிருந்து கொழும்புக்கு 227 பயணிகளுடன் நேற்று மாலை ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமானம் கிளம்பியது. ஓடுதளத்தில் இருந்து விமானம் மேலே எழும்பும் போது விமானத்தின் சக்கரம் ஓடுதளத்தின் எல்லையில் இருக்கும் விளக்கில் பயங்கரமாக மோதியது
இதனை அடுத்து, என்ன நடந்ததென்று சிறிது நேரம் விமானிக்குப் புரிபடவில்லை, எனவே அவர் விமானத்தை எப்படியோ நிறுத்தினார்.
பயணிகள் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு ஓடுதளம் மூடப்பட்டு, பின்னர் நிலைமை சீரானதும் திறக்கப்பட்டது.
இந்த விபத்தில் விமானத்தின் சக்கரம் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதேநேரம் இந்தச் சம்பவத்தையடுத்து மேற்படி விமானப் பயணம் இரத்துச் செய்யப்பட்டது