தெற்கை ஆட்டிப்படைத்த மழை – இதுவரை 20 பேர் உயிரிழப்பு- 68,343 பேர் பாதிப்பு!!
23 May,2018
சீரற்ற வானிலை கார ணமாக 19 மாவட்டங்க ளில் இதுவரை ஏற்பட்ட இடரால் 10 பேர் உயிரிழந்தனர். 68 ஆயிரத்து 343க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கேகாலை, பொலன்னறுவை, காலி, புத்தளம் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மின்னல் தாக்கத்தின் காரணமாக நால்வரும், கடுங் காற்றால் மூவரும், மண்மேடு சரிந்து ஒருவரும், நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவரும் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இடர்களால் 18 மாவட்டங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 079 குடும்பங்களைச் சேர்ந்த 68 ஆயிரத்து 343 பேர் பாதிப்புகளை எதிர்ககொண்டுள்ளனர் என்றும் மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
சீரற்ற காலநிலையால், 25 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. ஆயிரத்து 464 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.தற்சமயம் 168 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் 6710 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 187 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.