வெளிநாடு செல்லும் வீட்டுப் பணிப் பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாட்டு ஊசி ஏற்றப்படுகின்றதா?
20 May,2018
வெளிநாடு செல்லும் வீட்டுப் பணிப் பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாட்டு ஊசி ஏற்றப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்லும் வீட்டுப் பணிப் பெண்களுக்கு இவ்வாறு குடும்பக் கட்டுப்பாட்டு ஊசி ஏற்றப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ள அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ சுயாதீனமான அடிப்படையில் இந்த விசாரணைகள் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மையென்றால் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்