இலங்கையில் இந்திய இராணுவத் தளபதி!
14 May,2018
நேற்று இலங்கை வந்தடைந்த, இந்திய இராணுவத் தளபதி, ஜெனரல் பிபின் ராவட் பத்தரமுல்லையிலுள்ள இந்திய அமைதிப்படை நினைவுச் சின்னத்திற்கு இராணுவ மரியாதை செலுத்தியுள்ளார். இந்தியாவிற்கும் இலங்கைக்கு இடையில் நிலவும் பாதுகாப்பு புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கான இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்துவதற்காக இந்திய இராணுவத் தளபதி தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய குழு வருகை தந்துள்ளது.
இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தப் பயணம் இடம்பெற்றுள்ளது. இவர்கள் இலங்கையில் தங்கியுள்ள காலப்பகுதியில் ஜனாதிபதி பிரதமர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு படை அதிகாரிகளின் தலைமை அதிகாரி முப்படை தளபதிகள் ஆகியோரை சந்திக்கவுள்ளனர்.இராஜதந்திரிகள் பலரையும் இவர்கள் சந்திக்கவுள்ளனர்.
தியத்தலாவயிலுள்ள இலங்கை இராணுவ கற்கை நெறிப்பீடத்தை பார்வையிடவுள்ளதுடன், திருகோணமலை மற்றும் காலி பிரதேசத்திற்கும் பயணம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது