இறந்துவிட்டார் பிரபாகரன்? அடுத்த தலைவர் கஜேந்திரகுமார்
04 May,2018
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துள்ளமையால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழியில் தமிழ் மக்கள் தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தினக் கூட்டம் நல்லூர் கிட்டுப் பூங்காவில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, பிரபாகரன் இறந்துவிட்டார் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தெரிவித்தமை அங்கிருந்த கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்ததுடன், ஆனந்தராசா மீது கடுமையான விமர்சனத்தையும் தோற்றுவித்துள்ளதாக கூறப்படுகிறது.