பட்டப்பகலில் கொள்ளை – மடக்கி பிடித்த மக்கள்!! –VIDEO
02 May,2018
பலாங்கொடை நகரில் அமைந்துள்ள தங்க நகை கடைக்குள் நுழைந்த இருவர் அங்கிருந்த தங்க மாலைகளுடன் கூடிய பெட்டியினை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இன்று(2) பிற்பகல் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திருடப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி சுமார் 3 லட்சத்திற்கும் அதிகம் என நகை கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
கொள்ளையிட்டு தப்பிச் சென்றவர்களில் ஒருவரை பிரதேசவாசிகள் தொரவெல பகுதியில் வைத்து மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் பலாங்கொடை – வேவல்வத்தை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தப்பிச் சென்ற மற்றைய சந்தேக நபரை தேடி காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த கொள்ளை சம்பவம் நகை கடைக்கு அருகில் பொருத்தப்படிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.