பௌத்த மயமாக மாறும் வவுனியா நகரம்
29 Apr,2018
வெசாக் பண்டிகையினை முன்னிட்டு வவுனியா நகரம் முழுவதும் கொடிகள், வெசாக் கூடுகள் தொங்க விடப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்ட செயலகத்திலும் வெசாக் பண்டிகைக்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
பொலிஸார், இராணுவத்தினரின் ஏற்பாட்டில் பிரதி பொலிஸ் மா அதிபரின் அலுவலத்திலிருந்து வவுனியா நகர் வரை கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளதுடன் வெசாக் தோரணங்கள் வீதியின் இரு மருங்கிலும் தொங்க விடப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் வாசஸ்தலத்திற்கு அருகே பாரிய அளவிலான வெசாக் தோரணங்கள் செய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
தமிழர்கள் செறிந்து வாழும் இடமான வவுனியா நகரம் பெருபான்மை மக்களின் கைகளுக்கு மாறி செல்கின்றமை மன வேதனையளிக்கும் விடயமென சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்