இலங்கையின் அழைப்பை நிராகரித்தார் யஸ்மின் சூகா!
28 Apr,2018
ஐ.நா முன்னாள் அதிகாரி யஸ்மின் சூகா இலங்கைக்குப் பயணம் செய்யுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்துள்ளார் என்று சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரச படையினர் 40,000 அப்பாவி தமிழ் பொதுமக்களை படுகொலை செய்தனர் என சூகா குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்தநிலையில் இலங்கைக்கு வருமாறு சூகாவிற்கு அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது. மே மாதத்தில் சூகா இலங்கைக்கு பயணம் செய்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இலங்கைக்கு விஜயம் செய்தால் எதிர்ப்புக்கள் கிளம்பும் என்ற காரணத்தினால் சூகா தனது பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளது