எச்சரிக்கை! இலங்கை விமான நிலையத்திலும் திருட்டு
27 Apr,2018
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் பயணிகளின் 75க்கும் மேற்பட்ட பயணப் பொதிகள் காணாமல் போயுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் பயணப் பொதிகள் காணாமல் போவது தொடர்பாக இதுவரை 75க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
பயணப் பொதிகள் தவறுதலாக காணாமல் போனதா அல்லது திட்டமிடப்பட்ட வகையில் திருடப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
கடந்த 25 ஆம் திகதி நபர் ஒருவர் பயணி ஒருவரின் பயணப் பொதியை களவெடுத்து செல்லும் காட்சி விமானநிலையத்திலிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.