திருகோணமலையில் அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை
26 Apr,2018
அமெரிக்க கடற்படையின் USNS Mercy என்ற பாரிய மிதக்கும் மருத்துவமனைக் கப்பல், நேற்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
பசுபிக் ஒத்துழைப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த அமெரிக்க கடற்படைக் கப்பல் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளது.
279.49 மீற்றர் நீளமும், 32.2 மீற்றர் அகலமும் கொண்ட இந்தக் கப்பலில் முழுமையான கருவிகளைக் கொண்ட 12 அறுவைச் சிகிச்சைக் கூடங்களும், 1000 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனை வசதிகளும் உள்ளன.
நவீன மருத்துவ ஆய்வு கூட, பரிசோதனை வசதிகள், மருந்தகம், ஆகியவற்றுடன் இரண்டு பிராண வாயு உற்பத்திக் கூடங்களும் இந்தக் கப்பலில் உள்ளன.