கேப்பாப்புலவு படை முகாம் அருகே பற்றியெரியும் தேக்கம் காடு!
25 Apr,2018
முல்லைத்தீவு - கேப்பாப்புலவு இராணுவ முகாமின் வாயிலுக்கு அண்மையில் உள்ள தேக்க மரக்காட்டில் இன்று இரண்டாவது தடவையாகவும் தீ பரவியுள்ளது. கடும் வெய்யில் காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. படை முகாம்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இராணுவத்தினர் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இந்தத் தீ பரவலால் 25 ஏக்கர் வரையான தேக்கமரக்காடுகள் எரிந்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.