பருத்தித்துறை இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
24 Apr,2018
போலி ஆவணங்கள் மூலம், சிங்கப்பூர் செல்ல முயற்சித்த இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்- பருத்தித்துறையைச் சேர்ந்த 25 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இளைஞனி்ன் பயணப்பொதியை பரிசோதித்த போது, அதில் சிங்கப்பூரிலிருந்து இங்கிலாந்து செல்வதற்கான விமான பயணச்சீட்டு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த இளைஞரிடம் இருந்து போலியாக தயாரிக்கப்பட்ட கடற்படையினரால் வழங்கப்படும் அடையாள அட்டையுடன் கூடிய புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக குறித்த இளைஞர் விமானநிலைய குற்றவிசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.