இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி, பெண் உட்பட நால்வர் காயம்
22 Apr,2018
இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி, பெண் உட்பட நால்வர் காயம்
அத்தனகல, நிட்டம்புவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். அத்தனகல, நிட்டம்புவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் போதே குறித்த துப்பாக்கிப் பிரயோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் தேவாமித்த, ஹெய்யந்தெடுவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய வர்த்தகரொருவரே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த நால்வரும் வதுபிட்டியவல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும்பொலிஸார் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரையும் கைதுசெய்யவில்லை