இலங்கை ரப்பர் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 5 பேர் பரிதாப பலி
19 Apr,2018
இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள ஹொரானா நகரில் ரப்பர் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு அம்மோனியா வாயுவை சேகரித்து வைக்கும் தொட்டி உள்ளது.
இந்நிலையில், அந்த தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில் தொழிலாளர் ஒருவர் இன்று ஈடுபட்டார். அப்போது விஷவாயு தாக்கி அவர் மயங்கி விழுந்தார்.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்க தொட்டியின் உள்ளே இறங்கினர். இதில் விஷவாயு தாக்கி அவர்களும் பரிதாபமாக இறந்தனர்.
தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இறந்தவர்கள் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், விஷவாயு தாக்கியதில் மயங்கி கிடந்த 10க்கு மேற்பட்டவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். #Tamilnews