தீவிரவாத தொடர்பு - சவூதியில் இலங்கையர் கைது!
18 Apr,2018
தீவிரவாத குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக saudi gazette இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.கடந்த 24 நாட்களில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் 59 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இலங்கையர் ஒருவரும் உள்ளடங்குவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 7ம் திகதி கைது செய்யப்பட்ட அவரது தனிப்பட்ட விபரங்கள் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை. சவுதியில் தேசிய பாதுகாப்பு தலைமையகத்தின் புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது