ரூ.39 கோடி முறைகேடு செய்ததாக, இலங்கை முன்னாள் அமைச்சர் மகிந்தாநந்தா அலுத்கமேகே கைது
16 Apr,2018
கொழும்பு: விளையாட்டுத்துறைக்கு பொருட்கள் வாங்கியதில் ரூ.39 கோடி முறைகேடு செய்ததாக, இலங்கை முன்னாள் அமைச்சர் மகிந்தாநந்தா அலுத்கமேகே கைது செய்யப்பட்டார்.இலங்கையில் ராஜபக்சே அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் மகிந்தாநந்தா அலுத்கமேகே. இவர் பதவியில் இருந்த காலத்தில் விளையாட்டு சாதனங்கள் வாங்கியதில் ரூ.39 கோடி முறைகேடு செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை சொந்த ஜாமினில் நீதிபதி விடுவித்தார்.அலுத்கமேகே கூறுகையில், சிறீசேனா அரசு அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதாக கூறினார். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், முன்னாள் அதிபர் ராஜபக்சே குடும்பத்தினர் பலர் மீது ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. தற்போது கைது செய்யப்பட்ட அமைச்சர், ஏற்கனவே நிதி முறைகேடு புகாரில் 2016ல் கைது செய்யப்பட்டவர்.
முன்னதாக அவர், தன்னை கைது செய்ய தடை கோரி தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.