பொதுத் தேர்தல் ஒன்றை நோக்கி அரசை நகர்த்துவதே, புதுவருடத்தில் உள்ள ஒரே நோக்கம்….
15 Apr,2018
பொதுத் தேர்தல் ஒன்றை நோக்கி அரசை நகர்த்துவதே இநதப் புதுவருடத்தில் உள்ள ஒரே நோக்கம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கால்ட்டன் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற புதுவருடக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் தமக்கு மிகவும் ஒரு நல்ல வருடமாக அமைவதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளது எனத் தெரிவித்த அவர் அரசாங்கத்திற்குள் ஐக்கியதேசயக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பயணத்துக்கான ஆரம்ப அத்திவாரம் போன்றவை தற்பொழுது நிகழ்ந்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது என்றாலும் இந்த அரசுக்குப் பலம் இருக்குமென்றால், பயம் இல்லையென்றால் உடனடியாக இந்த அரசைக் கலைத்து நாடாளுமன்ற தேர்தல் ஒன்றுக்குப் போகவேண்டும் என்பதே தமது புதுவருட எதிர்பார்ப்பாகக் காணப்படுகிறது எனவும் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.