ஆபத்தான இறாலின் வருகையை தடுக்குமாறு பொலிசில் முறைப்பாடு!
08 Apr,2018
புது வகையான இறால் இனம் ஒன்று இலங்கைக்குக் கொண்டு வரப்படவுள்ளதாகவும், அது 6 வகையான நோய்களை பரப்பும் என்பதால் அதனைத் தடுக்குமாறும், பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வன்னமெய் என்ற இந்த இறால் இனமே, இன்று இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக நீர்வள அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை இந்த இறால் இனம் இலங்கையில் காணப்படவில்லை எனவும், இதனால் 6 வகையான நோய்கள் உருவாக்கப்படும் எனவும், குறித்த இறால் இன வளர்ப்பை இலங்கையில் தடுக்குமாறு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் திணைக்களத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.