மைத்திரியின் மரணத்தை எதிர்வுகூறிய ஜோதிடருக்கு சிக்கல்!
03 Apr,2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரணமடைவார் என்று ஆருடம் கூறிய பிரபல ஜோதிடரான விஜித ரோஹண விஜேமுனி மீது நடவடிக்கை எடுப்பதற்கான ஆலோசனையை சட்டமா அதிபரிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அனுமதியை இரகசிய பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் மரணமடைவார் என்ற ஆருடத்தை ஜோதிடர் விஜித ரோஹண விஜேமுனி சமூக வலைத்தளத்தின் ஊடாக வெளியிட்டதால் தென்னிலங்கை உட்பட நாடு முழுவதிலும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்மீது சட்டநடவடிக்கை எடுப்பதற்கான அழுத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. இதுதொடர்பிலான முறைப்பாடு கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் லால் ரணசிங்க பண்டார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மன்றில் பிரசன்னமாகிய இரகசிய பொலிஸார், சந்தேக நபரான ஜோதிடர் விஜித ரோஹண மீது சட்டநடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறவிருப்பதாக தெரியப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை எதிர்வரும் 9ஆம் திகதி நடத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்ட அதேவேளை, அன்றைய தினம் விசாரணை அறிக்கையை சமர்பிக்கும்படியும் இரகசிய பொலிஸாருக்கு உத்தரவை பிறப்பித்தது.