அம்பனில் மகள் வெட்டிக் கொலை, தாய் படுகாயம்!
02 Apr,2018
வடமராட்சி கிழக்கு, அம்பன் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன், பெண் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது தாயார், படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இனந்தெரியாத நபர்களால் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில், நல்லதம்பி ரேவதி (வயது 58) என்ற பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். அவருடைய தாயாரான நல்லதம்பி ராசம்மா (வயது 75) வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.