இரண்டாம் உலகப்போரின் போது கடலில் மூழ்கடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் மீட்பு
01 Apr,2018
இரண்டாம் உலகப்போரின் போது கடலில் மூழ்கடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் 75 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை கப்பல் படை நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போரின் போது கடலில் மூழ்கடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் மீட்பு
கொழும்பு:
கடந்த 1942-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது இங்கிலாந்தை சேர்ந்த தனியாருக்கு சொந்தமான ‘எஸ்.எஸ். சகாயிங்’ என்ற பயணிகள் கப்பல் கடலில் சென்று கொண்டிருந்தது.
இலங்கை கடல் பகுதியில் சென்றபோது அக்கப்பல் மீது ஜப்பான் போர் விமானங்கள் குண்டுவீச்சு நடத்தின. அதில் அக்கப்பல் கடலில் மூழ்கியது.
452 அடி நீளமான அக்கப்பலின் உடைந்த பாகங்கள் திரிகோணமலை துறைமுகத்தில் 35 அடி ஆழத்தில் மூழ்கி கிடப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே அதை மீட்கும் பணி நடைபெற்றது. அதில் இலங்கை கடற்படையில் உள்ள ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் ஈடுபட்டனர். அப்பணி கடந்த ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி தொடங்கியது.
இந்தநிலையில் அக்கப்பல் நேற்று மீட்டு கடலுக்கு மேலே கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் 75 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.