கடற்படைக்கு புதிய போர்க்கப்பல் - கொழும்பு வந்தது!
26 Mar,2018
இலங்கை கடற்படைக்காக கோவாவில் நிர்மாணிக்கப்பட்ட ரோந்துக்கப்பல் நேற்றுக் காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த ரோந்துக் கப்பலுக்கு இலங்கை கடற்படை மரபுகளுக்கு அமைய கடற்படையினர் வரவேற்பு அளித்தனர். இந்த கரையோர பாதுகாப்பு கப்பல், தளபதி சமன் பெரேரா மற்றும் 18 அதிகாரிகளும் 100 கடற்படை உறுப்பினர்களுடன் இலங்கைக்கு வந்துள்ளது.

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க, கடற்படைத் தளபதிகளின் தலைமை பணிப்பாளர் ரையர் அட்மிரல் பியால் டி சில்வா, மேற்கு கடற்படைப் தளபதி ரையர் அட்மிரல் நிஷாந்த உளுகெட்டென்னே, கடற்படை செயலாளர் மற்றும் கடற்படை தளபதியின் செயலாளர், அட்மிரல் விஜித மெட்டெகோடா, மேற்கு கடற்படைத் தளபதியின் மூத்த கடற்படை அதிகாரிகள் ஆகியோர் இந்த புதிய கப்பலை பார்வையிட்டதுடன் அடுத்த வாரம் இந்த கப்பலுக்கான இலங்கை பெயர் சூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது