போர் உச்சக்கட்டம் அடைந்தபோது விடுதலைப்புலிகள் தங்கத்தை புதைத்து வைத்தனரா?
21 Mar,2018
வடக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் விடுதலைப்புலிகள் ஏராளமான தங்கத்தையும், நகைகளையும், ஆயுதங்களையும் ரகசியமாக புதைத்து வைத்து உள்ளதாக போலீசாருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாஜிஸ்திரேட்டு அனுமதியுடன், அந்த இடத்தை 3 மணி நேரம் கனரக எந்திரங்கள் உதவியுடன் நேற்று தோண்டிப்பார்த்தனர்.
அப்போது அங்கு தண்ணீர்தான் கிடைத்ததே தவிர, தங்கமோ, நகைகளோ, ஆயுதங்களோ கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.
இதையடுத்து தோண்டும் பணி நிறுத்தப்பட்டது.
இன்று அந்த இடத்தில் மீண்டும் தோண்டும் பணி நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.